வடக்கு அயர்லாந்தில்  மலிவாக கிடைக்கும்  பசுமை தொழில்நுட்ப சாதனங்கள்

வடக்கு அயர்லாந்தில் மலிவாக கிடைக்கும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள்

வடக்கு அயர்லாந்தில் வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சார வாகன சார்ஜர்கள் மற்றும் பசுமை தொழில்நுட்ப சாதனங்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, வலையமைப்பை மேம்படுத்த தேவையான ஆரம்ப செலவு, முதலில் நிறுவும் நபருக்கு மட்டுமே விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல், ஆரம்ப செலவுகள் பயனர்கள் மற்றும் வணிகங்களிடையே பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், வடக்கு அயர்லாந்தை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் ஏனைய பகுதிகளுடன் இணைத்து முதலீட்டாளர்களுக்கு சமமான  சூழலை உருவாக்கும் என கூறப்படுகிறது.

பல நிறுவனங்கள் பசுமை தொழில்நுட்பங்களை நிறுவி, மின்சாரத்திற்கு மாறி, கார்பன் தடத்தை குறைக்க முயற்சிக்கின்றன.

இந்த மாற்றம் புதிய தொழில்நுட்பங்களை ஏற்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் என்றும், வணிக நம்பிக்கையை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )