
பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீடு
இங்கிலாந்தில் பெல் ஹோட்டலை புகலிடம் கோருபவர்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் மேன்முறையீடு செய்ய எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட கவுன்சில், திட்டமிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கூட்டத்துக்குப் பிறகு, மேன்முறையீட்டை தொடரப்போகிறோம் என கன்சர்வேடிவ் தலைவர் கிறிஸ் விட்பிரெட், பிபிசிக்கு தெரிவித்தார்.
பெரும்பான்மையான கவுன்சிலர்கள் தொடர்ச்சியான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் மோல்ட் கவுன்சிலின் கோரிக்கையை நிராகரித்து, தடை உத்தரவு திட்டமிடல் கட்டுப்பாட்டிற்கு பொருத்தமான வழிமுறை அல்ல என்று தீர்ப்பளித்தார்.
ஒழுங்காக, திட்டமிடப்பட்ட மற்றும் நீடித்த திட்டத்தில் ஒவ்வொரு புகலிட ஹோட்டலையும் மூடுவதற்கு தீர்ப்பு அனுமதித்துள்ளது என உள்துறை அலுவலகம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
