
விடுதலைப் புலிகளின் தலைவரின் 71 ஆவது பிறந்ததினம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71 ஆவது பிறந்த தினம் வல்வெட்டித்துறையில் இன்று கொண்டாடப்பட்டுள்ளது.
யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது கேக் வெட்டியும், 71 இனிப்பு மற்றும் மர கன்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்க வழங்கியும் பிறந்த தினத்தை கொண்டாடினர்.
மேலும், இந்த கொண்டாட்டத்தில் பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
CATEGORIES இலங்கை
