
ஹல்துமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவான கஞ்சா தோட்டங்கள்
ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுக்தென்ன வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் தியதலாவ படையினர் இணைந்து அந்த பகுதியில் 02 நாட்கள் மேற்கொண்ட சோதனையின் போது இவை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த பகுதியின் பல இடங்களில் சுமார் 06 ஏக்கர் பரப்பளவில் பயிரிடடிப்பட்டிருந்த கஞ்சா
செடிகள் அழிக்கப்பட்டன.
மேலும் சுமார் 115 கிலோ கிராம் உலர்ந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற சாட்சியங்களுக்காக மாதிரிகள் பெறப்பட்ட பின்னர், முழு சாகுபடியும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
