‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்

‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்

அருணாச்​சலப் பிரதேசத்​தில் வசிப்​பவரின் இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடி​யுரிமை அதி​காரி​கள் தொந்தரவு கொடுத்​துள்​ளனர்.

அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்​தவர் பெமா வாங் தாங்​டாக். இவர் லண்​டனில் இருந்து ஜப்​பான் சென்​றுள்​ளார். வழி​யில் சீனாவின் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இறங்கி 3 மணி நேரத்துக்​குப்​பின் மாற்று விமானத்தில் ஜப்​பான் செல்ல திட்டமிடப்​பட்​டிருந்​தார். கடந்த 21ம் திகதி இவர் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கிய​போது, இவரது இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என சீன குடி​யுரிமை அதி​காரி​களும், சீன ஈஸ்டர்ன் ஏர்​லைன்ஸ் நிறுவன அதி​காரி​களும் கூறி​யுள்​ளனர்.

காரணம் அவரது பாஸ்​போர்ட்​டில் பிறந்த இடம் அருணாச்​சலப் பிரதேசம் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. அருணாச்​சலப் பிரதேசம் சீனா​வில் இருக்​கும் பகுதி எனக் கூறி, அவரது இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என கூறி பெமா வாங்கை சீன அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர். 18 மணி நேரத்​துக்கு மேலாக அவர் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் சிறைவைக்​கப்​பட்​டார். அவரது பாஸ்​போர்ட்டை முடக்​கி, அவர் ஜப்​பான் செல்​வதை​யும் தடுத்து நிறுத்​தினர்.

அப்போது பெமா வாங் சீன பாஸ்​போர்ட்​டுக்கு விண்​ணப்​பிக்க வேண்​டும் எனக் கூறி சீன அதி​காரி​கள் கேலி செய்​துள்​ளனர். விமான நிலை​யத்​தில் உள்ள உணவு விடுதி மற்​றும் இதர வசதி​களை பெமா வாங் பயன்​படுத்த அனு​ம​திக்​க​வில்​லை. பின்​னர் லண்​டனில் உள்ள நண்​பர் மூலம் ஷாங்​காய் நகரில் உள்ள இந்​திய தூதரகத்தை பெமா வாங் தொடர்பு கொண்​டார். இந்​திய தூதரக அதி​காரி​கள் தலை​யிட்டு பெமா வாங்கை ஜப்​பானுக்கு அனுப்பி வைத்​தனர்.

இதுகுறித்து பெமா வாங் தாங்​டாக் கூறுகை​யில், “இது இந்​திய இறை​யாண்மை மீதான நேரடி தாக்​குதல். இந்த விவ​காரம் குறித்து பிரதமர் மோடி​யும், இந்​திய அதி​காரி​களும் சீன அரசுடன் பேச வேண்​டும். அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்​தி​யர்​கள் வெளி​நாடு​கள் செல்​லும்போது, அவர்​களின் பாது​காப்​புக்கு உத்​தர​வாதம் அளிக்​கப்பட வேண்​டும்” என கூறி​யுள்​ளார். இந்​தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் முடிந்த நிலை​யில், சீன குடி​யுரிமை அதி​காரி​கள்​ அத்​து​மீறலில்​ ஈடுபட்​டுஉள்​ளனர்​.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )