கமலுக்கு மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பு

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன்.
இவர் யூடியூப் உ ள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசியதை கண்டித்து நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், ‘கமல் கழுத்தை அறுத்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் இவர் மீது பொலிஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த கைதில் இருந்து தப்பிக்க ரவிச்சந்திரன் முன்பிணை பெற்றார்.
இந்நிலையில் தற்போது பா.ஜ.க.வில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
