பிரித்தானியா AI பயன்பாட்டில் முன்னேறுவதற்கு தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் -லியன் ஜோன்ஸ்

பிரித்தானியா செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் முன்னேறுவதற்கு தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய பங்களிப்பை ஆற்றிய கணினி விஞ்ஞானி லியன் ஜோன்ஸ், தெரிவித்துள்ளார்.
தற்போது டோக்கியோவில் வசிக்கும் ஜோன்ஸ் முன்னாள் கூகுள் ஆராய்ச்சியாளருடன் சேர்ந்து தொடங்கிய Sakana AI நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார்.
இந்த நிறுவனம், எதிர்காலத்தில் AI எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை ஆராயும் தனிச்சிறப்பு கொண்ட நிறுவனம்.
அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள “ஹைப்பர்-ஸ்கேலர்” பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரித்தானியா எப்படியும் வெல்ல முடியாது என்றும் அதனால் அந்தப் போட்டியில் இறங்குவது பயனில்லை என்றும் கூறினார்.
அதற்கு பதிலாக UK, வித்தியாசமான மற்றும் புதுமையான AI ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஜோன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
