“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்”

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
நுகேகொடை கூட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன்,
சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே 50 பேரை கூட திரட்ட முடியா நிலையில் இருந்த நாமல் கட்சி இன்று UNP, SLFP உடன் சேர்ந்து தம் பலத்தை காட்டி உள்ளது.
கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். எமக்கு சரி வராது என மறுத்து விட்டோம்.
இந்த கூட்டத்தை வைத்து அரசை உடனடியா கவிழ்க்க முடியாது. அது கலர் கனவு.
மேடையிலும், அப்படி சொல்ல பட வில்லை. ஆனால், தான் கப்பல் கட்டுவது “ஹார்பரில்” தரித்து நிற்க அல்ல, ஆழ்கடலில் ஓடத்தான் என நாமல் கூறினார்.
இது, அரசுக்கு சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர் கட்சி யார் என நிலை நாட்டுவதே அங்கே முதல் கனவு.
இதன் மூலம் இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மகாஜனம், சில செய்திகளை தந்தது.
2019ல் கோத்தாவுக்கும், பின் 2024ல் அநுரவுக்கும் வாக்களித்த அதே 69 இலட்சம் மக்கள், விரும்பினால் தாய் வீடு திரும்பலாம் என்பது நாமலின் கருத்து.
எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டில் நாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர்.
