மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் பாத்திமா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீனர் சிங் 2-ம் இடம் பிடித்தார்

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகேயுள்ள நோந்தபுரியில் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 120 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் சார்பில் மணிகா விஸ்வகர்மா பங்கேற்றார். இறுதிச் சுற்று போட்டி நேற்று காலை நடைபெற்றது. இறுதிச் சுற்றின்போது 30 பேரில் ஒருவராக மணிகா விஸ்வகர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சுற்றில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மணிகா இடம்பெறவில்லை. பின்னர் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 5 பேருக்கும் கடைசி கட்ட இறுதிச் சுற்று போட்டி நடத்தப்பட்டது.
இதில் மெக்ஸிகோவை சேர்ந்த பாத்திமா போஸ் பெர்னாண்டஸ் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். தாய்லாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் பிரவீனர் சிங் 2-ம் இடத்தையும் பிலிப்பைன்ஸை சேர்ந்த அதிஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
