கஜகஸ்தான் விமான விபத்து – 42 பேர் பலி (புதிய இணைப்பு)

கஜகஸ்தான் விமான விபத்து – 42 பேர் பலி (புதிய இணைப்பு)

கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 42 பேர் இறந்திருக்கலாம் என்று கஜகஸ்தானின் அவசரநிலை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கஜகஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஜகஸ்தானின் 72 பேருடன் பயணித்த விமானம் விழுந்து நொருங்கியது

72 பேருடன் பயணித்த விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

விமானம் அவசரமாக தரையிறங்கக் கோரியதாக கூறப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

விமானத்தில் 72 பேர் இருந்ததாக அஜர்பைஜான் விமான நிறுவனங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பாகுவிலிருந்து ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் க்ரோஸ்னியில் மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்டதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் குறைந்தது 67 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This