ஜி – 20 மாநாட்டை புறக்கணித்த ட்ரம்ப்

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவம்பர் 23 ஆம் திகதிவரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார். மாநாட்டில் அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
2013 ஆம் ஆண்டுக்கு பிறகு தென்னாபிரிக்கா செல்லும் முதல் ஆஸ்திரேலிய பிரதமர் இவராவார்.
இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது.
தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா
அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார். இதனை அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை.
தென் ஆப்ரிக்காவுக்கான அமெரிக்க தூதர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்பார். தென் ஆப்ரிக்காவின் ஜனாதிபதி என்ன பொய்களை கூறினாலும், அதிகாரபூர்வ கூட்டங்களில் அமெரிக்கா பங்கேற்காது. இவ்வாறு கரோலின் லீவிட் தெரிவித்தார்.
ஆபிரிக்காவில் ஜி – 20 மாநாடு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
