Miss Universe 2025 பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பாத்திமா பொஷ்

இந்த வருடத்திற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார்.
‘மிஸ் யுனிவர்ஸ்’ என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்த போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, தாய்லாந்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் வெற்றி பெற்று, 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார்.
வெற்றி பெற்ற பாத்திமா, நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
2ஆவது இடம் : தாய்லாந்து
3ஆவது இடம்: வெனிசுலா
4ஆவது இடம்: பிலிப்பைன்ஸ்
5ஆவது இடம்: கோட் டி’ஐவொயர்
இந்த போட்டியில், இந்திய அழகி மணிகா விஸ்வகர்மா நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு, டாப் 12 இடங்களுக்குள் நுழையாமல் வெளியேறினார். இறுதி சுற்றுகளுக்கு தேர்வான டாப் 12 போட்டியாளர்களில் மெக்சிகோ, தாய்லாந்து உட்பட பல நாடுகள் இடம்பெற்றன.
இந்தியாவின் சாய்னா நேவால் இந்த போட்டிக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
