பாம்புகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் – சஜித் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று (20) வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் அறைக்குள் பாம்பு நுழைந்ததாகத் தாம் கேள்விப்பட்டதாகவும், எனவே சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் நாடாளுமன்றம் ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் (environmentally sensitive zone) அமைந்துள்ளதாலேயே பாம்புகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
