தங்காலை நகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வி

தங்காலை நகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள தங்காலை நகர சபையின் கன்னி (முதலாவது) வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய, ஒரு மேலதிக வாக்கினால் தங்காலை நகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி வெற்றியீட்டியுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள வெலிகம பிரதேச சபையின் கன்னி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில், பொது எதிர்க்கட்சி 23 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளதால்  வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This