இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும்

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த பாதுகாப்பு ஒப்பந்தம் முன்னரே சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சிங்கள மொழியில் உள்ள ஆவணம் மட்டுமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

உரிய ஒப்பந்தம் (முழுமையாக) சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சபையில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், குறித்த ஒப்பந்தம் முன்னரே பாதுகாப்பு அமைச்சின் மீதான விவாதத்தின் போது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதனை மீண்டும் இன்று (20) தான் சபையில் சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This