நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Share This