ஜார்கண்ட் மாநிலத்தில் மாநாட்டில் சிறிதரன், செந்தில் தொண்டமான் பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் அதை மேம்டுத்துவது தொடர்பாகவும், இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மாநாட்டில் ஆராயப்பட்டது.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் நிதி திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ராதா கிருஷ்ணன் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மாஜி ஆகியோர் கௌரவித்தனர்.

