2026 உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் தகுதி

2026 உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் தகுதி

2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது.

ஆர்மினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்பதுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்த போர்த்துகல் அணி 2026 உலகக் கிண்ண தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளது.

போர்த்துகல் அணி சார்பில்  புருனோ பெர்னாண்டஸ் மற்றும் ஜோவா நெவ்ஸ் ஆகியோர் தலா மூன்று கோல்களை அடித்திருந்தனர்.

எவ்வாறாயினும் நேற்றையப் போட்டியில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடியிருக்கவில்லை.

போர்ச்சுகல் அணி நேற்றைய தினம் தங்களின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி குழு ஆட்டத்தில் மூன்றாவது முயற்சியிலேயே தகுதி பெற்றுள்ளது.

இதன் மூலம் ஏழாவது முறையாக உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை போர்த்துகல் அணி பெற்றுள்ளது.

எனினும், அந்த அணி இதுவரை உலகக் கிண்ணத்தை ஒருபோதும் வென்றதில்லை.

இந்தப் போட்டி முழுவதும் புருனோ பெர்னாண்டஸ் மிகவும் ஆதிக்கம் செலுத்தியிருந்தார். போட்டியின் 45, 54 மற்றும் 72வது நிமிடங்களில் அவர் அணிக்காக மூன்று கோல்களை அடித்திருந்தார்.

இதேவேளை, குரூப் எஃப்-இன் மற்றொரு போட்டியில் அயர்லாந்து அணி ஹங்கேரியை மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This