சந்தோஷ் ஜாவை சந்தித்த, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
