நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
“ தேசிய மக்கள் சக்தியால் நாட்டை மீட்க முடியும் என நம்புகின்றனர். அரசாங்கம் சிறப்பாக பயணிப்பதற்குரிய சட்டங்களை எமது ஆட்சியில் இயற்றி கொடுத்துள்ளோம். அந்த வழியில் தற்போது பயணிப்பதால் பிரச்சினை இல்லை.
2028 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியாவிட்டால், அதைவிடவும் சிறப்பான திட்டத்தை முன்வைக்கும் தரப்புக்கு ஆதரவளிக்கக்கூடும். அதை நோக்கியே எதிரணியின் பயணம் அமைய வேண்டும்.” எனவும் பந்துல குணவர்தன கூறினார்.
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிரணி என கூறிக்கொள்ளும் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என முக்கிய அரசியல் பிரமுகர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
