பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.

என்றாலும், தற்போது வெளியாகிவரும் முடிவுகிளன் பிரகாரம் 169 இடங்களில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 74 இடங்களில் மாத்திரமே முன்னிலை பெற்றுள்ளது.

Share This