2019ஆம் ஆண்டுக்கு முந்தைய பொருளாதார நிலை விரைவில் – ஜனாதிபதி உறுதி

2019ஆம் ஆண்டுக்கு முந்தைய பொருளாதார நிலை விரைவில் உருவாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றிவரும் ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.
கடந்த ஆட்சியாளர்கள் 2029ஆம் ஆண்டில்தான் 2019ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையை ஏற்படுத்த முடியும் எனக் கூறினர். ஆனால், நாம் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
