வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் கலந்துகொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் நாளை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This