ரஷ்யாவின் மதிப்புமிக்க நட்புறவு விருதை வென்ற சமன் வீரசிங்க

மொஸ்கோவின் கிரெம்ளினில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் டொக்டர் சமன் வீரசிங்கவுக்கு நட்புறவுக்கான விருது (Order of Friendship) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான இந்த கௌரவம், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராஜதந்திர, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியமைக்கான கௌரவமாகும்.
2025 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்ற ஒரே ஆசிய நாட்டவர் டொக்டர் வீரசிங்க ஆவார். இது இலங்கையின் உலகளாவிய இராஜதந்திர இருப்புக்கு ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
மொஸ்கோ மருத்துவ அகடமியில் கௌரவப் பட்டம் பெற்ற டொக்டர் வீரசிங்க, ரஷ்ய கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவராக (2015 – 2018) பணியாற்றியிருந்தானர். தற்போது இலங்கை-ரஷ்ய நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், கொழும்பில் உள்ள ரஷ்ய புவியியல் சங்க மையத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
அவரது தலைமைத்துவம் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றம், அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த நல்லெண்ணத்தை வளர்த்துள்ளது.
