இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 293,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 317,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு – செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தங்கச் சந்தையில் நேற்ற 22 கரட் தங்கம் ஒரு பவுண் 294,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் 318, 000 ரூபாவாகவும் பதவாகியிருந்தது.
இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,998 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
நேற்று நாள் தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,969 அமெரிக்க டொலர்களாகக் குறைந்த போதிலும், நாள் முடிவில் தங்கத்தின் விலை மீண்டும் 4,025 அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தமை குறிப்பிடத்கதக்து.
