சபாநாயகர் அலுவலகத்தில் கூறியபடியே ‘கலாநிதி’ என்று பிரசுரிக்கப்பட்டது

சபாநாயகர் அலுவலகத்தில் கூறியபடியே ‘கலாநிதி’ என்று பிரசுரிக்கப்பட்டது

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்று பிரசுரித்தமை தொடர்பில் நாடாளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் ‘கலாநிதி’ என்று குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் நாடாளுமன்ற இணையதளத்தில் தரவுகள் உள்ளிடப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் உறுப்பினராக ஹர்ஷன நாணயக்கார பெயரிடப்பட்டு, அவருடைய பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்று குறிப்பிட்டு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரம், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நாடாளுமன்றத்தின் மூன்று அதிகாரிகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This