நாளை முதல் இலவச பொலிதீன் பைகளுக்கு தடை

நாளை முதல் இலவச பொலிதீன் பைகளுக்கு தடை

பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது.

ஒக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பட்டியலில் விற்பனையாளர்கள் பொலிதீன் பைகளின் விலையைக் குறிப்பிடுவதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயப்படுத்தியுள்ளது.

குறைந்த அடர்த்தி பொலிதீன் (LLDPE) மற்றும் நேரியல் குறைந்த அடர்த்தி பொலிதீன் (LDPE) ஆகியவற்றால் செய்யப்பட்ட பைகளை இலவசமாக வழங்கக்கூடாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகங்கள் இந்த பைகளின் விலையை தங்கள் வளாகத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This