மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள்

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
பிற்பகல் இரண்டு மணி வரை பாடசாலை நேரங்கள் நீடிக்கப்படவுள்ளதால், சிறப்பு ஏற்பாடுகளில் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
இதற்கமைய, மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலைகளின் புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்து முதல் தரம் 13 வரையான அனைத்து வகுப்புகளுக்கான நேரமும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
