மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குறித்த தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை ஜனவரி மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேன்முறையீடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகிய இருவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This