“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான “மோந்தா” சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகத்தினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடாவில் தற்போது உருவாகி வரும் புயல், இன்று (28) மாலை/இரவு நேரத்தில் கடுமையான சூறாவளி புயலாக வலுவடைந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This