தமிழ்நாடு-காங்கசன்துறை படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

தமிழ்நாடு-காங்கசன்துறை படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் அடுத்த டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கடல் பகுதிகளில் நிலவும் பாதகமான வானிலையைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவை ஒக்டோபர் 14, 2023 அன்று தொடங்கப்பட்டது, அன்றிலிருந்து தொடர்ந்து இயங்கி வருகிறது.

இந்தக் கப்பலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டினர் பயணம் செய்கிறமை குறிப்பிடத்தக்கது.

Share This