கச்சத்தீவு மீட்பு – இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறு மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

கச்சத்தீவு மீட்பு – இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறு மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், கச்சத்தீவு மீட்பு குறித்து வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

* கச்சத்தீவு மீட்பு

* இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்

* மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்

* பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு

* கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல்

ஆகியவற்றை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் மோடியிடம் வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியுள்ளார்.

Share This