டொலருக்கு நிகராக பாரிய வளர்ச்சிகண்டுவரும் ஆப்கானிஸ்தான் நாணயம்

டொலருக்கு நிகராக பாரிய வளர்ச்சிகண்டுவரும் ஆப்கானிஸ்தான் நாணயம்

டொலருக்கு நிகராக ஆப்கானிஸ்தான் நாணயம் பாரிய வளர்ச்சிகண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது.

தாலிபான் அரசு பொறுப்பேற்ற பின்னர், டொலரின் மதிப்பு சரிந்து வருகிறது.

தொடர்ச்சியாக ஆப்கனியின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.

நான்கு ஆண்டுகளில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 67 ஆப்கனிகளாக குறைந்துள்ளது. இது ஒரு உலக சாதனையாகும் என்று ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தகி டில்லியில் தெரிவித்துள்ளார்.

எதனால் இந்த வளர்ச்சி? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், இப்போது எங்களுடைய நாட்டில் கலவரம் இல்லை. குழப்பம் இல்லை. போதை இல்லை. அமைதி நிலைபெற்றுள்ளது. நீதியும் அமைதியும் நல்லிணக்கமும் நிலைபெற்றுள்ளது. எங்கள் மீது எவருடைய ஆதிக்கமும் இல்லை. அரசியலும் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் இந்த அபாரமான வளர்ச்சி ஏனைய நாடுகளை மலைக்க வைத்துள்ளது.

குறிப்பாக கொவிட் தொற்று உலக பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பல்வேறு போர்களுக்கு மத்தியில் ஆப்கான் நாயணம் எட்டியுள்ள இந்த வளர்ச்சி அபரீதமானது என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )