காகிதங்களை கையளிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை: காணி உரிமை பற்றி சஜித் பிரேமதாச கருத்து

வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்பே வீடுகளை நிர்மாணிப்போம் என காகிதத் துண்டுகளை பகிரும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
” 1987 ஆம் ஆண்டு அனைவருக்கும் போதுமான வசிப்பிடத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு, பத்து இலட்சம் வீடுகள், பதினைந்து இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
2500 மாதிரி கிராமங்கள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 300 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. 2500 வீடுகளை நிர்மாணிப்போம் எனக் கூறி வெறுமனே காகிதத் துண்டுகளை பகிர்ந்தளிக்கவில்லை.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அதேவேளை, தேர்தலை நடத்துவதாக இருந்தால், தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவியுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கு தயாராகவே உள்ளது. எந்தவொரு கருத்துக் கணிப்புக்கும், எந்தவொரு பலப்பரீட்டைக்கும் நாம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.