738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி

738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி

காசாவில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது.
இதையடுத்து காசா​வில் 10-ம் திகதி போர் நிறுத்​தம் அமுலுக்கு வந்​தது.

எகிப்​தில் நடை​பெற்ற அமைதி மாநாட்​டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​னிலை​யில் இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் உறு​தி​யானது. முன்​ன​தாக, ஹமாஸ் குழு​வின் பிடி​யில் இருந்த 20 இஸ்​ரேலிய பிணைக் கைதி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டனர். அதே​போல் இஸ்​ரேல் சிறை​களில் அடைக்​கப்​பட்​டிருந்த 154 பாலஸ்​தீனர்​களும் விடுவிக்​கப்​பட்​டனர்.

பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நாட்​டைச் சேர்ந்த அவி​நாட்​டன் ஓர் என்​பவரும் விடுவிக்​கப்​பட்​டார். இவர் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிடித்து வைத்​திருந்த 20 இஸ்​ரேலியர்​களில் ஒரு​வர் ஆவார்.

சுமார் 738 நாட்​கள் பிணைக் கைதி​யாக இருந்த இவர் நேற்று முன்​தினம் வீடு வந்து சேர்ந்​தார். அவரைப் பார்த்​ததும் அவரது மனைவி நோவா அர்​காமனி ஓடி வந்து கட்​டியணைத்​துக் கொண்​டார். கணவரை முத்​தமிட்டு வரவேற்​றார். சந்​தோஷத்​தில் அவர் வாய்​விட்டு அழு​தார்.

மனை​வியைப் பார்த்​ததும் கண்​ணீர் விட்டு அழு​தார் அவி​நாட்​டன் ஓர். அவி​நாட்​டனின் மனைவி நோவா அர்​காமனி​யும், பிணைக் கைதி​யாக பிடித்து வைக்​கப்​பட்​டிருந்​தார். இஸ்​ரேல் ராணுவத்​தினர் கடந்த ஆண்டு மேற்​கொண்ட முயற்​சி​யால் அவர் விடுவிக்​கப்​பட்​டார். 2 ஆண்​டு​களுக்​கும் மேலான பிரிவுக்​குப் பின்​னர் தம்​ப​தி​யர் ஒன்று சேர்ந்​ததற்கு நண்​பர்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர்.

இரு​வரும் கட்​டியணைத்து வரவேற்ற வீடியோ, புகைப்​படங்​கள் தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளன.

 

Share This