ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இந்த ஒருமனதாக முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரேமதாச, இரு கட்சிகளின் தனிப்பட்ட அடையாளங்களைப் பேணுவதோடு, நாடும் அதன் குடிமக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கை ஒப்பந்தங்களில் இரு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்.