கொழும்பில் நவம்பரில் ஆசிய பசிபிக் ஊடக ஒன்றுகூடல்

கொழும்பில் நவம்பரில் ஆசிய பசிபிக் ஊடக ஒன்றுகூடல்

ஆசிய, பசிபிக் (ABU) ஊடகங்கள் எதிர்வரும் நவம்பர் 25- ஆம், 27 ஆம் திகதிகளில் கொழும்பில் ஒன்றுகூடவுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் 200 பேர் 35 நாடுகளில் இருந்து பங்கு கொள்கின்றனர் என இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கிளீன் ஸ்ரீலங்கா மேலதிகச் செயலாளர் ஜிஹான் டி சில்வா கல்கிசை ஹோட்டலில் நடத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

ஆசிய பசிபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டினை இம்முறை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதான அனுசரணையாளரான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் முன்னின்று இம்மாநாட்டினை நடத்துகின்றது. இம்மாநாடு எதிர்வரும் நவம்பர் 25 ஆம், -27 ஆம் திகதிகளில் கல்கிசை பீச் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் கிளீன் சிறிலங்கா மற்றும் ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் இணைந்த நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் பிராந்தியத்தில் உள்ள ஊடக நிறுவனங்கள் சிவில் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 75 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி மாநாடு சம்பந்தமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜிஹான் டி சில்வா மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் கிளீன் ஸ்ரீலங்கா, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், செய்திப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இம்மாநாடு இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து. பிஜி, நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நடைபெற்று இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது.

இலங்கை சுனாமியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கையில் வெள்ளப்பெருக்கு, வரட்சி, மண்சரிவு, நிலஅதிர்வுகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் அனர்த்தங்கள் உள்ளிட்ட விஷயங்கள் சம்பந்தமான ஊடகவியலாளர் இவ்விடயங்களை எவ்வாறு பொதுமக்களுக்கு செய்திகளை கொண்டு செல்ல முடியும் என்பது குறித்து விரிவாக ஆரயப்படவுள்ளதாக ஆசிய பசுபிக் பிராந்திய ஒலிபரப்புச் சங்கமான ABU அறிவித்துள்ளது.

ஜப்பான்(NHK), சீனா(CMG), இந்திய தூரதர்ஷன், அவுஸ்திரேலியாவின் (ABC) துருக்கியின்(TRT) மலேசியா(RTM) ஆகிய ஊடக நிறுவனங்கள் உட்பட 35 நாடுகளைச் சேர்ந்த தேசிய ஊடக நிறுவனங்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்வார்கள். அதனுடன் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அனர்த்தங்கள், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றிலிருந்து மக்களை பாதுகாத்து தூய்மையான மற்றும் பசுமையான எதிர்கால மொன்றை உருவாக்குதல் இந்த மாநாட்டில் பிரதான நோக்கமாகும்.

2004 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் (ABU) உள்ள 14 ,16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 227,000 பேரின் உயிர்களை காவுகொண்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவ்வாறு ஊடக நிறுவன சந்திப்பொன்று இடம்பெற வேண்டிய முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.

இம்மாநாட்டை முன்னிட்டு புதிய இலச்சினை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Share This