பஸ்களில் நவம்பர் முதல் டிஜிட்டல் கட்டணமுறை அறிமுகம்.

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதுடன், வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணிகள் கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டார்.
அத்துடன், இத்திட்டம் இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் படிப்படியாக நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது டிக்கெட் இயந்திரம் ஊடாக டிக்கெட் வழங்கப்படும் அனைத்து பஸ்களிலும் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.