ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட் 731 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் பெத் மூனே 713 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், 612 புள்ளிகளுகடக் இரண்டு இடம் பின்தங்கி, 16 வது இடத்தில் உள்ளார்.
இலங்கைக்கு எதிரான உலக கிண்ண போட்டியில் அரைசதம் அடித்த தீப்தி சர்மா 610 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த இரு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹர்லீன் ஏழு இடங்கள் முன்னேறி 38 வது இடம் பிடித்தார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் சோபி எக்லெஸ்டோன் 792 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவின் தீப்தி சர்மா 640 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.