பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயப் பகுதிகளாகவும், பன்றிகள் நோய் அபாயப் விலங்குகளாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளன.
1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.,
இந்த வர்த்தமானி அறிவிப்பு ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், மூன்று மாதங்ககள் வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அபாயப் பகுதிகளில் இருந்து நோயை பரப்பக்கூடிய சில நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.