தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சிறப்புக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது குழுவுக்கோ எந்த சூழ்நிலையிலும் சிறப்பு ஊக்குவிப்பு வழங்கப்படாது என்று பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.