இலங்கையில் வாகன விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி – விலையும் சரிந்தது

இலங்கையில் வாகன விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி – விலையும் சரிந்தது

வாகன விற்பனை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 28 அன்று அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மாதங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்து வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது வாரத்திற்கு பத்து வாகனங்கள் அல்லது அதற்கும் குறைவாக விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனம் வாங்க எதிர்பார்த்த பலர் முதல் சில மாதங்களில் வாகனங்களை வாங்கியதாகவும், இது வாகனத் தேவை குறைவதற்கு பங்களித்ததாகவும் வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

வாகன விற்பனை குறைந்துள்ளதால், வாகன விலையிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். ஜப்பானில் வாகன ஏலங்களில் வாகன விலைகள் குறைந்திருப்பது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சந்தையில் 100 லட்சம் ரூபா மதிப்புள்ள வாகனத்தின் விலை சுமார் ஐந்து லட்சம் குறைந்துள்ளதாகவும், 200 லட்சம் ரூபா மதிப்புள்ள வாகனத்தின் விலை 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபா வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் 249 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை 918 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புதிய வாகனங்கள் சந்தையில் வருவதால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான தேவையும் கடுமையாகக் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This