அவசர கூட்டத்தை கூட்டும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (07) நடைபெற உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மருத்துவர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் வீரசூரிய தெரிவித்தார்.
சுகாதார நிர்வாகத்தால் மருத்துவர்களின் தன்னிச்சையான இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அம்பாறை மாவட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இதுவரை அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவனம் செலுத்தாததால், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முடிவு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.