எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும், வீட்டின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் இந்த சம்பவம் அப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததற்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This