ஆதவன் வானொலியின் 09 வது பிறந்த நாள் சிறப்பு கொண்டாட்டம்

ஆதவன் வானொலியின் 09 வது பிறந்த நாள் சிறப்பு கொண்டாட்டம்

மேலைத்தேய – ஐரோப்பிய தமிழ் வானொலிக் கலாசாரத்திலும், பிரித்தானிய தமிழ் வானொலிக் கலாசாரத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள லைக்காவின் ஆதவன் வானொலி, இன்று தனது 9 வது பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடுகிறது.

லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் “உலகை நோக்கிய பயணம்” என்ற தொலைநோக்குப் பார்வையில் ஆரம்பித்த லைக்கா ஊடக வலையமைப்பின் ஆதவன் வானொலி பல கண்டங்களை கடந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் ஓர் இணைய வானொலியாக ஆரம்பித்த ஆதவனின் ஒலிபரப்பு, பின்னர் தனது சேவையினை லண்டனில் DAB எனும் அதி நவீன அலைவரிசைத் தொழிநுட்பத்துக்குள் நுழைந்தது.

பிரித்தானியாவைக் கேந்திரமாகக் கொண்டு இயங்கிவந்த ஆதவன் வானொலி, பிரித்தானியாவைத் தொடர்ந்து ஜரோப்பா, இலங்கை, கனடாவிலும் பிரத்தியேக ஒலிபரப்புகளை ஆரம்பித்திருக்கிறது.

ஆதவனின் இணையத்தளம், நேயர்கள் வசிக்கும் பிராந்தியங்களின் நேர வேறுபாடு மற்றும் நாடு என்பவற்றைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குப் பொருத்தமான செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக வழங்க ஆரம்பித்தது.

தமிழ் வானொலி வரலாற்றில் நாடுகள் மற்றும் நேர வலயங்களுக்கு ஏற்றவாறு பிரத்தியேக ஒலிபரப்பினை வழங்கும் தொழிநுட்பத்தை முதன்முதலாக அறிமுகம் செய்துவைத்த பெருமையும் ஆதவன் வானொலியையே சாரும்.

இந்த 9ஆவது ஆண்டில் ஆதவன் வானொலி தனது அடுத்த கட்ட நகர்வாக, பிரித்தானியா முழுவதுக்குமான ஒலிபரப்பை விஸ்தரிக்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்தநிலையில், எமது சகோதர வானொலியான ஆதவன் வானொலிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share This