தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ம் ஆண்டில் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் அதி.மு.க. ஆட்சியில் 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ம் ஆண்டில் 6580 ஆகவும், 2023-ம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் ஒப்பிடும் போது தி.மு.க. ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 60.66 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இந்த புள்ளிவிவரங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தமிழக மாவட்டங்களில் 53 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இதுவரை 20 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதனால் 60 சதவீதம் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )