மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்

மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்

சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்று மாணவர்கள் கசிப்பு அருந்திக் கொண்டிருந்தபோது மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் அந்தப் பாடசாலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயின்று வருகின்றனர், மேலும் அவர்கள் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள்.

அவர்கள் போதையில் இருந்து முழுமையாக மீளும் வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்டு மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மொனராகலை பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையின் பல மாணவர்களும் குடிபோதையில் இருப்பதாக மொனராகலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, பாடாலைக்கு சென்ற பொலிஸார், மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share This