ரணிலின் கூட்டணியில் விரிசல் – தனித்து கதிரையில் செல்லும் பங்காளிகள்
![ரணிலின் கூட்டணியில் விரிசல் – தனித்து கதிரையில் செல்லும் பங்காளிகள் ரணிலின் கூட்டணியில் விரிசல் – தனித்து கதிரையில் செல்லும் பங்காளிகள்](https://oruvan.com/wp-content/uploads/2024/12/PA.jpg)
பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டனர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட பங்காளிக் கட்சிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் தனித்து போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் சு.க உட்பட பல கட்சிகள் ஐ.தே.கவின் கூட்டணியின் கீழ் போட்டியிட விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளன.
உள்ளூராட்சித் தேர்தல் உட்பட எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் யானை சின்னத்தில் போட்டியிட ஐ.தே.க தீர்மானித்துள்ளது. இதனால் புதிய ஜனநாயக முன்னணிக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. தேசிய பட்டியல் விவகாரத்திலும் இக்கூட்டணிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டதால் பங்காளிக் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலில் கதிரை சின்னத்தில் இக்கட்சிகள் போட்டியிட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பையும் புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பையும் சு.க விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.