பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மனு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதியன்று ராஜகிரியவில் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை இரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனுவை நவம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This