பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பம். சீனா, ரசியா வரவேற்பு

பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பம். சீனா, ரசியா வரவேற்பு

சீன – ரசிய ஆகிய பிரதான பொருளாதார நாடுகயை மையப்படுத்தி பத்து நாடுகள் அங்கம் வகிக்கும் பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இணைய பாஸ்தீனம் விணப்பித்துள்ளது. பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளமை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணம் என்று அல் சபாகா (al-shabaka.org) என்ற ஆங்கில செய்தித் தளம் விமர்சித்துள்ளது.

அதேவேளை, சிறப்பு பிரதிநிதியாக அங்கம் வகிக்கவே விண்ணப்பித்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாலஸ்தீன தூதுவர் அப்தல் ஹபிஸ் நோபல் தெரிவித்துள்ளார். தொடர்பாக ரஷ்யா பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியில் பிறிக்ஸ் பொருளாதார கூட்டில் இணைய பாலஸ்தீனம் ஆர்வம் காண்பித்துள்ளது. ஆனாலும் சில கட்டுப்பாடுகள் உண்டு. அதனை பிறிக்ஸ் உறுப்பு நாடுகள் புரிந்து கொண்டு சிறப்பு அங்கத்துவம் ஒன்றை வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கி வரும் பின்னணியில் பாலஸ்தீனம் விணப்பித்துள்ளதை சீனா வரவேற்றுள்ளது. அத்துடன் பிறிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ள ஏனைய நாடுகளின் விருப்பங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் சீனா அறிவித்துள்ளது

சீனா, ரசியா ஆகிய நாடுகளுடன் இந்தியா தென்னாபிரிக்க, பிரேசில் போன்ற முக்கியமான நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நிலையில், இந்தியா மாத்திரம் அமெரிக்காவுடன் உறவை பேணி வருகின்றதுஷ.

ஆனாலும் மிகச் சமீபமாக அமெரிக்க – இந்திய பணிப்போர் ஆரம்பித்துள்ள பின்னணியில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைவதை இந்தியா விரும்பக் கூடும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்த 2024 ஆம் ஆண்டு பிறிக்ஸ்சில் இணைந்தன. 2015ல் இந்தோனேஷியா இணைந்தது.

இலங்கை விண்ணப்பித்துள்ளபோதும் அது தொடர்பாக இதுரை பரிசீலிக்கப்படவில்லை.

Share This